மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கி இருக்கிறது. ஜெ., மறைந்த பின்னர் அவரது சொத்துக்களுக்கு யார் வாரிசு, உயில் எழுதிவைத்துள்ளாரா என்ற கேள்விக்கு யாரும் பதில் அளிக்க தயாராக இல்லை.
இந்நிலையில் இன்று மா,கம்யூ., மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களை சந்திக்கையில்,; கோடநாடு எஸ்டேட்டில் நடந்து வரும் கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டை அரசுடைமையாக்க வேண்டும்.
ஒரே மதம், ஒரே மொழி என்ற மத்திய அரசின் கொள்கையை ஏற்க முடியாது . அதிகார போட்டியால் மாநில அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. என்று அவர் கூறினார். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், ஜெ., நடிகையாக , முதல்வராக இருந்த நேரத்தில் அதிகம் சம்பாதித்துள்ளார். அவரது சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்றார்
BLOG COMMENTS POWERED BY DISQUS