Top Stories

Grid List

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் களத்தில் ஓடிய செங்குருதியின் நெடி பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட மூர்ச்சையடைய வைக்கிறது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. 

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார். 

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

Top Stories

Grid List

“அரசாங்கம் பழிவாங்கும் படலத்தை மீண்டும் ஆரம்பித்திருக்கின்றது. ஆனாலும், அதற்கான பதிலை மக்கள் சீக்கிரத்தில் வழங்குவார்கள்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“ஒக்டோபர் புரட்சிக்கு அனைவரும் தயாராகுங்கள். உறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். எவரும் அச்சம் கொள்ள வேண்டாம்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

“தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். எழுக தமிழ் பேரணியில் கட்சிகள் என்ற முறையில் இல்லாமல் தமிழர்கள் என்ற ரீதியில் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும்” என்று தமிழ் மக்கள் பேரவையின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக வரும் டிசம்பர் மாதம் உறுதியாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்வார் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டை, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் பெற அனுமதி அளித்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகக் குற்றசாட்டப்பெற்று, நேற்று முன்தினம் இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு, டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழக நிலப்பரப்புக்குள், பயங்கரவாதிகள் ஊடுருவியதாக புலனாய்வுத் தகவல்கள் அறியப்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் காவல்துறையினர் கடும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.{ விசாரணைகளுக்கு உள்ளாகியள் இவ்வேளையில், அவரது மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரருமான கார்த்திக் சிதம்பரத்துக்கும் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அறிய வருகிறது.

பா.ஜ.க அரசு முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்கிறது. இதன் உண்மை நிலையறியாமல் ஊடகங்கள் சிதம்பரத்தின் மீது தவறான அபிப்பிராயத்தை உருவாக்க முனைவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் தனது அனைத்துப் படைகளையும் வாபஸ் பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா ரூ 12.5 கோடி நிதியுதவியைக் கூடுதலாக வழங்கியுள்ளது.

பனிப்போர் முடிந்த பின் 1987 ஆமாண்டு அமெரிக்காவும் ரஷ்யாவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க அணுவாயுத ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன.

அண்மையில் ரஷ்யாவின் கிரிமியா பகுதிக்கு 226 பயணிகளுடனும் 7 ஊழியர்களுடனும் புறப்பட்ட யூரல் ஏர்பஸ் 312 என்ற விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்துக்குள்ளேயே பறவைகள் கூட்டம் எஞ்சினில் மோதி ஆபத்தை எதிர்நோக்கியது.

ஆப்கான் தலைநகர் காபூலில் திருமண நிகழ்வொன்றின் போது திடீரென இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலில் 63 பேர் பலியானதாகவும் 180 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Top Stories

Grid List

இன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை மழை காரணமாக இடை நிறுத்தப் பட்டு இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமான இந்திய நியூசிலாந்து அணிகளுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

சனிக்கிழமை இங்கிலாந்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை இந்தியா அணி 7 விக்கெட்டுக்களாலும் அவுஸ்திரேலிய அணியைத் தென்னாப்பிரிக்க அணி 10 ரன்களாலும் வெற்றி கொண்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை எட்ஜ்பஸ்டொன் மைதானத்தில் இந்திய வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை இந்தியா 28 ரன்களால் வெற்றி கொண்டுள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜா மீது இயக்குனர்கள் வைத்திருக்கிற அன்பு ஒரு வரலாற்று பதிவாக மாற வேண்டாமா? என்று அவரவர் கேள்வி கேட்டதன் விளைவு? விரைவில் ஒரு விழாவாக மாறப் போகிறது.

டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் தெலுங்கு படங்களில் நடித்த ராஷ்மிகாவுக்கு கோடம்பாக்கம் கொண்டாட்ட வளைவு வைக்க ஆரம்பித்துவிட்டது.

“அவரே சிம்புவை வேணாம்னு சொல்லிட்டாரா... அப்ப அந்த பக்கமே போகக் கூடாது” என்கிற முடிவுக்கு வந்துவிட்டது கோலிவுட். ‘மாநாடு’ விஷயத்தில் சிம்புவை ஹேண்டில் செய்ய முடியாமல் பின்வாங்கிய சுரேஷ் காமாட்சி, தன் முடிவை அறிவித்த அடுத்த நொடியே சிம்புவின் சென்சக்ஸ் மளமளவென சரிந்துவிட்டது கோடம்பாக்கம் பங்கு சந்தையில்.

‘பைரவி’ படத்தின் மூலம் ரஜினியின் கதவுகளை திறந்தவர் வசனகர்த்தா கலைஞானம்! கிட்டத்தட்ட எண்பது வயதை தொடும் அவருக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடந்தது. நடத்தியவர் இயக்குனர் பாரதிராஜா.

சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான, சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதினை (Golden Leopard), Pedro Costa இயக்கிய போர்த்துக்கல் திரைப்படமான Vitalina Varela எனும் திரைப்படம் வெற்றி கொண்டது

புகழ்பெற்ற காற்பந்து வீரர் டியோகோ மரடோனாவை பற்றி ஒரு ஆவணத் திரைப்படம். லொகார்னோ திரைப்பட விழாவில் பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கை அப்படியே 80,90 களின்  காற்பந்து மைதானமாக மாற்றிச் சென்றது.

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது கௌரவிக்கப்பட்டவர் சுவிற்சர்லாந்தின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான Fredi M.Murer.

லோகார்னோ பியாற்சா கிரான்டே பெருந்திரையில் காண்பிக்கப்பட்ட படங்களில் பெரும் ஆர்வத்தினையும், எதிர்பார்ப்பினையும் தூண்டிய படங்களில் ஒன்றாக இருந்தது " கமிலே" (Camille). ஆயுதங்களின் அகோரப் பசிக்கு, சொற்ப வயதில் பலியாகிப்போன ஒரு இளம் பெண் Camille Lepage வாழ்வு தழுவிய உண்மைக் கதையது.

கதவே இல்லாத எலிப்பொறியில், பல்லே இல்லாத எலி சிக்கிய மாதிரி செல்வராகவனின் ஃபேட் அவுட் காலத்தில் அவரிடம் சிக்கியிருக்கிறார் சூர்யா.

இளையராஜாவின் ‘பீக் ஹவர்’ காலத்தில் வாழ்ந்த பதினெட்டு ப்ளஸ்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்.

“எப்படியிருந்த விவேக் இப்படியாகிட்டாரே...!” டோன்ட் பேனிக். இது பாராட்டுதான்!

தமிழ்சினிமாவை அண்மைக்காலமாக ப்ளூ கலர் வைரஸ்களும், ரெட் கலர் பாக்டீரியாக்களும் அட்டாக் பண்ணி வருவதால், ‘சோ கால்டு’ ஒலக சினிமா படைப்பாளிகளை விட்டு, ரசிகர்கள் பல மைல் தொலைவு தள்ளியிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (டு லெட், விசாரணை போன்ற உலக சினிமா உருவாகக் காரணமான படைப்பாளிகள் மட்டும் மன்னிப்பீர்களாக!)

அண்மையில் .நா மனித உரிமைகள் கவுன்சிலின் 40வது அமர்வில் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் இது. «No Fire Zone» ஆவணத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக, இலங்கையின் இறுதியுத்தத்தில் நடந்தவற்றை மீள்பார்வையிட்டபடி  இலங்கை அரசு அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் எப்படி சர்வதேச அழுத்தத்தை தட்டிக்கழிக்கிறது என்பதனைக் காண்பிக்கிறது இக்குறுந்திரைப்படம்.

இன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன. 

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

குறு நிலங்களாகப் பிளவுபட்டிருந்த அம் மலைப்பிரதேசம், பல்வேறு ஆட்சியாளர்களால் பலகாலம் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஆஸ்திரிய மன்னனால், அடிமைப்பட்டுக்கிடந்த காலமதில், அரச அதிகாரியாகச் செயலாற்றிய ஜெஸ்லர், மலைவாழ் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.

அண்மையில் செய்மதி மூலம் படம் பிடிக்கப் பட்ட HD140283 என்ற நட்சத்திரம் அல்லது மெத்துசெலா நட்சத்திரம் என செல்லமாக அழைக்கப் படும் விண்மீன் ஆனது உண்மையில் எமது பிரபஞ்சத்தை விட வயதானதா?

திங்கட்கிழமை மதியம் 2:43 மணிக்கு ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என்ற மூன்று நிலைகளைக் கொண்ட சந்திராயன் 2 என்ற விண்கலம் வெற்றிகரமாக இந்தியாவின் ஸ்ரீ ஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

ஆக்டோபர் 3 ஆம் திகதி பூமிக்கு மிக அருகே கடக்கும் 2007 FT3 என்ற விண்கல் பூமியுடன் மோதினால் சுமார் 2700 மெகாடன் டி என் டி இற்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும் என சமீபத்தில் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வருடம் ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தின் விட்டத்தை உடைய மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகே கடக்கவிருப்பதாகவும் அது பூமியுடன் மோத கிட்டத்தட்ட 1/7000 மடங்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

4தமிழ்மீடியாவின் மனமே வசப்படு.

மேலும் மனமே வசப்படு பதிவுகளுக்கு : 
http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu
https://www.facebook.com/ManameVasappadu/

மேலும் மனமே வசப்படு : https://www.facebook.com/ManameVasappadu/

எமதுபார்வை

“…உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி பெற்ற வாக்குகளை விட அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் அதிகமாகும். அத்தோடு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, தற்போது அவரது அணி பெற்றுள்ள வாக்குகள் குறைவாகும். ஆகவே, புதிய அரசியலமைப்பினை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்…” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளையும் பின்னுக்குத்தள்ளி மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்றிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெருவெற்றி பெற்றிருக்கின்றது. உண்மையில் இந்த உள்ளூராட்சித் தேர்தலை மஹிந்த ராஜபக்ஷ தரப்பு, சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை மீளப்பெறுவதற்காகவே எதிர்கொண்டது. குறிப்பாக, தேர்தல் முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த நிலையை பிடிப்பதற்காகவே திட்டமிட்டுச் செயலாற்றியது. ஆனால், தேர்தல் முடிவுகள், ஐக்கிய தேசியக் கட்சியைத் தாண்டியும் 13 இலட்சம் வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ தரப்பு பெற்றிருக்கின்ற நிலை என்பது, தென்னிலங்கையில் தற்போதையை அரசாங்கத்திற்கான மதிப்பு எப்படியிருக்கின்றது என்பதைக் காட்டி நிற்கின்றது.

அத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி பெற்ற வாக்குகள் வெறும் 15 இலட்சம் வாக்குகளாகும். இது, மஹிந்த ராஜபக்ஷ தரப்பு பெற்ற 50 இலட்சம் வாக்குகளோடு ஒப்பிடும் போது மிகமிகச் சொற்பமாகும். அப்படியான நிலையில், கட்சிக்கு வெளியிலிருந்தே சுதந்திரக் கட்சியை மஹிந்த ராஜபக்ஷவினால் கபளீகரம் செய்ய முடிந்திருக்கின்றது. அவ்வாறான நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் முடிவுகளுக்காக சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களோ, சிரேஷ்ட உறுப்பினர்களோ காத்திருக்கப் போவதில்லை. அதனால், நல்லாட்சி அரசாங்கமும் நடுவழியில் தடம்புரளப் போகின்றது. ஜனாதிபதித் பதவி இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்தால், அதன்பின்னர், சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை வகிப்பது சார்ந்த சிக்கலையும் மைத்திரிபால சிறிசேன எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறான நிலையில், அவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்போடு மிகப்பலவீனமான நிலையில் விட்டுக்கொடுப்புக்களோடு இணக்கப்பாட்டுக்குச் செல்ல வேண்டியேற்படும். அது, எந்த வகையிலும் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கான தருணங்களை வழங்காது.

ஏனெனில், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தென்னிலங்கை பூராகவும் இரண்டு விடயங்களை முன்னிறுத்தியே பிரசாரங்களை முன்னெடுத்தது. அதில், முதலாவது, மத்திய வங்கி பிணைமுறை மோசடி. இரண்டாவது, புதிய அரசியலமைப்பினூடு வடக்கு- கிழக்கிற்கு சமஷ்டியை நல்லாட்சி அரசாங்கம் வழங்கப்போகின்றது என்பது. தேர்தல் முடிவுகளில் அவர்களின் பிரசாரம் பிரதிபலித்திருக்கின்ற நிலையில், புதிய அரசியலமைப்பொன்றை நோக்கி, குறிப்பாக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு மாற்றத்துக்கு சுதந்திரக் கட்சி மாத்திரமல்ல, ஐக்கிய தேசியக் கட்சியும் செல்லுவதற்கு தயாராக இருக்காது. ஏனெனில், அவ்வாறான முயற்சிகள் எதிர்வரும் ஆண்டுகளில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிலும், அதன்பின்னரான ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலிலும் பாரிய தோல்வியை வழங்கும் என்ற காரணத்தினாலாகும்.

அவ்வாறான நிலையில், புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டும் என்கிற சம்பந்தனின் வேண்டுகோளை யாருமே கவனிக்கப் போவதில்லை. அவரின், அரசியல் வாழ்வின் இறுதிக்காலக் குறிக்கோளான தமிழ் மக்களுக்கான தீர்வொன்றைப் பெறுதல் என்பது நிறைவேறாத ஒன்றாக மாறுவதற்கான கட்டங்களை இந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் பதிவு செய்து சென்றிருக்கின்றது.

கார்ட்டூன் : நன்றி Awantha Artigala

BLOG COMMENTS POWERED BY DISQUS