4TamilMedia | News&Entertainment Network

Tuesday, May 22nd

Last update12:00:01 AM

இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

மீண்டும் இலங்கை திரில்லிங் வெற்றி : அதிரடி சதமடித்தார் சங்ககார

AddThis Social Bookmark Button

இலங்கை - தெ.ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் ஜோஹன்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற ஐந்தாவதும்

இறுதியுமான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 312 ரன்களை துரத்தியடித்து திரில்லிங் வெற்றி பெற்றது. மைதானத்தில் நிரம்பிய வழிந்த தெ.ஆபிரிக்க ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.  கடந்த நான்காவது போட்டியில் இலங்கை அணி 299 ரன்களை சேஸிங் செய்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தெ.ஆபிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன்களை அதிரடியாக எடுத்தது. கிராம் ஸ்மித் 125 ஓட்டங்களையும், வில்லியெர்ஸ் 125 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பட்ட வீரர் தரங்க 46 ஓட்டங்களையும், டில்ஷான் 41 ஓட்டங்களையும் எடுத்து பலமான தொடக்கத்தை கொடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய குமார் சங்ககார தனது 11 வது ஒரு நாள் சதத்தை இப்போட்டியில் பூர்த்தி செய்தார். அவர் 97 பந்துகளில் 10 பவுன்றிகள் அடங்களாக 102 ஓட்டங்களை எடுத்தார். அவருக்கு பக்க பலமாக திரிமானே படுகூலாக விளையாடி 63 பந்துகளில் 69 ஓட்டங்களை குவித்தார். அவர் தனது முதலாவது அரைச்சதத்தையும் இப்போட்டியில் பூர்த்திசெய்தார்.

 எனினும் இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் அடிக்கவிருந்த நிலையில் இலங்கை சார்பில் சிறந்த துடுப்பாட்ட காரர்கள் எவரும் இருக்கவில்லை. கடைசியில் 2 பந்துகளில் ரன்கள் எனும் நிலை இருந்த போது சேனாநாயக, அதிரடியாக சிக்ஸர் அடித்து போட்டியை முடித்துவைத்தார்.

போட்டிநாயகனாக குமார் சங்ககாரவும், தொடர் நாயகனாக தெ.ஆபிரிக்க அணி கேப்டன் வில்லியெர்ஸும் தெரிவாகினர். இப்போட்டியில் இலங்கை அணி வென்றதன் மூலம் தொடரை 3-2 எனும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் சந்தர்ப்பம் அதிகமாக இருந்த போதும், டக்வத் லூயிஸ் முறையில் தெ.ஆபிரிக்காவுக்கு வெற்றி பறிபோனது.

அல்லது இத்தொடரை 3-2 என இலங்கையே கைப்பற்றியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை போட்டி தோல்வியின் பின்னர் இலங்கை அணியில் பல புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட போதும் இலங்கை அணியால் அவ்வளவாக பிரகாசிக்க முடியவில்லை. எனினும் தெ.ஆபிரிக்காவுடனான இத்தொடரில் இலங்கை அணியின் இளம் வீரர்கள் விளையாடிய விதம்,  இலங்கை அணி நிர்வாகமும், ரசிகர்களும் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க கூடிய வாய்ப்பை பெற்றுகொடுத்துள்ளது.  
பரிசளிப்பு விழாவின் போது போட்டிநாயகனாக தெரிவான குமார் சங்ககார இவ்வெற்றி பற்றி தெரிவிக்கையில், தமது ஆரம்ப வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்ததாகவும், இளம் வீரர், திரிமானேவும் போட்டியில் கலக்கிவிட்டதாகவும் தெரிவித்தார். இறுதியில் சேனாநாயக்க அடித்த சிக்ஸர், கேக்கில் ஐஸிங் வைத்தது போன்றிருந்தது என்றார்.

அடுத்தடுத்து இரு போட்டிகளில் 300 ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றது, இலங்கைக்கு முதல் முறை. 2007 இல் நியூசிலாந்து அணி, ஒரு முறை இப்படி வெற்றி பெற்றது. மேலும் உலக பிரபலமான 438 சேஸிங் போட்டிக்கு பிறகு, இந்த மைதானத்தில் சேஸிங் செய்யப்பட்ட அதிகூடிய ஸ்கோர் இப்போட்டியில் பெறப்பட்டதாகும்.

இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

உங்கள் கருத்து இங்கே

blog comments powered by Disqus

இச்செய்தி தொடர்பில் நீங்கள் நினைப்பது என்ன?

நாகரீகமான வார்த்தைகளில் உங்கள் கருத்துக்களைத் கீழேயுள்ள பாக்ஸில் தெரிவியுங்கள். அவற்றிக்கு கருத்தாளர்களே உரித்துடையவர்கள். அனுமதித்த பின்னரே வெளியாகும். கருத்துக்கள் தெரிவிப்பதற்கான முறை மற்றும் தமிழில் எழுத, உதவிக்கு அழுத்துக!..