Saturday, May 18th

Last update02:02:01 PM

கோலி, யுவராஜ் சிங் அதிரடி வீணானது : ஒரு ரன்னால் தோற்றது இந்தியா

யுவராஜ் சிங் களத்திற்குள் நுழையும் போது

இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் சேப்பாக்கத்தில் இன்று நடந்த டுவெண்டி20 போட்டியில் இந்திய அணி ஒரு ரன்னால் தோல்வி அடைந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை எடுத்தது. விக்கெட் கீப்பர் மெக்குலம் அதிரடியாக 55 பந்துகளில் 91 ஓட்டங்களை எடுத்தார். இதில் 11 பவுன்றிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும்.

பந்துவீச்சில் பதான் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 166 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இறுதி பந்தில் 4 ரன்கள் அடிக்கவிருந்த நிலையில் ரோகித் சர்மாவின்  முயற்சி தோல்வியில் முடிந்தது. முன்னதாக விராத் கோலி 41 பந்துகளில் 70 ஓட்டங்களை பெற்றார். புற்றுநோயால் குணமடைந்த யுவராஜ் சிங் ஒருவருடத்திற்கு பின்னர் மீண்டும் டுவெண்டி20 யில் களமிறங்கியதால் ரசிகர்களின் உற்சாக வரவேற்பு அரங்கை அதிர செய்தது. அவர் 26 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்றார். இதில் 1 பவுன்றி, 2 சிக்ஸர் அடங்கும்.


இரண்டு T20 போட்டிகள் கொண்ட தொடரில், முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நியூசிலாந்து இப்போட்டியில் வெற்றி பெற்றது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus