Tuesday, May 21st

Last update03:49:07 PM

அடுத்த ஐபிஎல் போட்டிகளில் டெக்கான் சார்ஜஸ் இல்லை!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி அதிரடியாக நீக்கப் பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்திற்குப் பின் இந்த அதிரடி முடிவை அறிவித்துள்ளது.
 
டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, டெக்கான் கிரானிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறது. அணி நஷ்டத்தில் இருப்பதாகக் கூறி,  டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விற்க முடிவு செய்தது அணி நிர்வாகம். இதன்படி, ஐபிஎல் நிர்வாகம் கலந்து பேசி அணியை ஏலத்தில்விட டெண்டர் கோரியிருந்தது ஐபிஎல் நிர்வாகம்.
    
ஒரேஒரு நிறுவனம் மட்டுமே ஏலத்தில் எடுக்க டெண்டர் கோரியிருந்தது. அந்த நிறுவனமும் குறைந்த விலைக்கு டெண்டர் கூறியிருந்ததால், அணியை விற்க முடியாத சூழலில், ஐபிஎல் நிர்வாகம் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை அதிரடியாக நீக்கியுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐபிஎல் போட்டிகளில் டெக்கான் சார்ஜச் விளையாடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
     
இதற்கிடையில் டெல்லி அணியின் கேப்டன் வீரேந்திர சேவக், தனது கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக கூறியுள்ளார். விளையாட்டில் முழு கவனம் செலுத்தி விளையாடவே தான் விரும்புவதால், தான் கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன் என்று சேவக் கூறியுள்ளார். இதை அடுத்து, டெல்லி அணிக்கு, மஹேலா ஜெயவர்தனே கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus