Saturday, May 18th

Last update09:59:27 AM

டேவிஸ் கோப்பை : நியூசிலாந்தை வயிட் வாஷ் செய்தது இந்தியா

நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நடைபெற்று முடிந்த டேவிஸ் கோப்பை ஆசியா-ஓசியானா குரூப் 1 'பிளே ஆஃப்' இன் அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று நியூசிலாந்தை 'வயிட் வாஷ்' செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற இறுதி இரண்டு ஒற்றையர் பிரிவு போட்டிகளில் ஒன்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரியும், மற்றையதில் இந்தியாவின் சனம் சிங்கும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இந்தியா 5-0 என நியூசிலாந்தை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு சென்றுள்ளது. 2005ம் ஆண்டு உஸ்பெகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்ததன் பின்னர் தற்போதே இந்தியா மீண்டும் எதிரணி ஒன்றை  வயிட் வோஷ் செய்துள்ளது.

இதே போன்று இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் விஷ்ணு வர்தன், அறிமுக வீரர் திவிஜ் ஷரன் ஜோடி நியூசிலாந்தை வெற்றிகொண்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு நடக்கும் தொடரில் இதே பிரிவில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் வெல்லும் பட்சத்தில் உலக குரூப் 'பிளே-ஆஃப் ற்கு தகுதி பெறும்.

இதேவேளை இம்முறை டேவிஸ் கோப்பையில் மட்டுமல்லாது, 2014 ஜூன் மாதம் வரை எந்தவொரு போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கு மகேஷ் பூபதி மற்றும் ரோஹன் போபண்ணா ஆகியோரு இந்திய டென்னிஸ் சங்கம் தடை விதித்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாட மறுத்தமையின் எதிரொலியாக இத்தடை விதிக்கப்பட்டிருக்கும் போதும்,  இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காகவும் இம்முடிவில் கூடுதல் கவனம் செலுத்தியதாக டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus