ஆப்கானிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது இங்கிலாந்து
- Friday, 21 September 2012 21:24

ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பில் இன்று நடைபெற்ற T20 போட்டியில் இங்கிலாந்து அணி இலகுவாக வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி கடும் சவாலாக விளங்கியதால் இப்போட்டியிலும் ஆப்கானிஸ்தான் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை எடுத்தது. எல்.ஜே.வ்ரைட் 55 பந்துகளில் 99 ஓட்டங்களை எடுட்தார். இதில் 8 பவுன்றிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும்.
பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 17.2 பந்துகளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களை எடுத்தவேளை சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
நாளை இலங்கை - தெ.ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியும், ஆஸ்திரேலிய - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு போட்டியும் நடைபெறவுள்ளது.
