இந்தியாவை துவம்சம் செய்தது ஆஸ்திரேலியா : சூப்பர் 8 சுற்றில் இலகு வெற்றி
- Friday, 28 September 2012 18:55

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெற்ற இன்றைய T20 சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழபுக்கு 140 ஓட்டங்களை எடுத்தது. பதான் 31 ஓட்டங்களையும், சுரேஷ் ரைனா 26 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் ஷேர்ன் வட்சன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பதிலுக்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 14.5 பந்துகளில் போட்டியை முடித்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஷேர்ன் வட்சன் 72 ஓட்டங்களையும், வார்னர் 63 ஓட்டங்களயும் அதிரடியாக எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தனர். போட்டி நாயகனாக ஷேர்ன் வட்சன் தெரிவானார்.
இன்று நடைபெற்ற மற்றைய போட்டியில் தெ.ஆபிரிக்க அணியை பாகிஸ்தான் அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நாளை இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும், இலங்கை - மே.இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெறவுள்ளது.
