Wednesday, May 22nd

Last update09:22:00 PM

தெ.ஆபிரிக்காவை வீழ்த்தியும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது இந்தியா!

இந்தியா - தெ.ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இன்றைய சூப்பர் 8 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போதும், பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுது பெற்றுள்ளது.

நெட்ரேட்டில் பாகிஸ்தான் முன்னிலையில் இருப்பதால் இந்த வாய்ப்பை பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 152 ஓட்டங்களை எடுத்தது. சுரேஷ் ரைனா 45 ஓட்டங்களையும், ரோகித் ஷர்மா 25 ஓட்டங்களையும் எடுத்து அணியை பலப்படுத்தினர்.

பதிலுக்கு களமிறங்கிய தெ.ஆபிரிக்க அணி 19.5 பந்துகளில் 151 ரன்களை எடுத்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் பாலாஜி, சகீர் கான் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

 எனினும் ஒரு ரன் வித்தியாசத்தில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றதால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. 
இன்று நடைபெற்ற மற்றைய போட்டியில், ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் அணி இலகுவாக வீழ்த்தியிருந்தது. அரையிறுதியில் பாகிஸ்தான் இலங்கை எதிர்கொள்கிறது. நாளை மறுதினம் இப்போட்டி நடைபெறுகிறது. அக்.5ம் திகதி மேற்கு இந்திய அணி - ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus