சீனா ஓபன் டென்னிஸ் : இறுதி போட்டியில் சானியா மிர்சா இணை தோல்வி
- Sunday, 07 October 2012 09:43

சீன ஓபன் டென்னிஸ் மகளீர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - ஸ்பெயினின் நூரியா இணை தோல்வியை தழுவியுள்ளது.
இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ரஷ்யாவின் மகரோவா - வெஸ்னியா இணையுடன், 7-5, 7-5 எனும் நேர் செட் கணக்கில் மிர்சா - நூரியா ஜோடி தோல்வியை தழுவியுள்ளது.
எனினும் இந்த ஆண்டில் மட்டும் ஐந்தாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சானியா மிர்ஸா அதில், இரண்டு முறை பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
