Friday, May 24th

Last update10:56:54 AM

இலங்கையை வீழ்த்தி T20 உலக கோப்பையை வென்றது மேற்கு இந்தியா

T20 உலக கோப்பை இறுதி போட்டியில் வென்று மேற்கு இந்திய அணி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை எடுத்தது. சாமுவேல்ஸ் 56 பந்துகளில் 3 பவுன்றிகள், 6 சிக்ஸர்கள் அடங்களாக 78 ஓட்டங்களை எடுத்தார். பந்துவீச்சில் மெண்டிஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. ஜெயவர்த்தன 33 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். மே.இந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் நரேய்ன் 3 விக்கெட்டுக்களையும், சாமி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டியில் வென்றதன் மூலம் மே.இந்திய தீவுகள் அணி தனது முதலாவது T20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.



பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus