Saturday, May 18th

Last update11:52:04 AM

விளையாட்டுக்கும் முக்கியத்துவம் என்ற சச்சினின் கோரிக்கைக்கு வரவேற்பு

இந்திய கல்வி திட்ட முறைமையில், விளையாட்டையும் ஒருங்கிணைக்க வேண்டும் என  இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுலர் எழுதிய கடிதத்திற்கு மத்திய அமைச்சர் கபில் சிபில் ஒப்புதல் தெரிவித்துள்ளதோடு, இந்த யோசனைக்கு வரவேற்பும் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட்டின் சாதனை பேட்ஸ்மேனாக திகழும் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபிலுக்கு அவர் எழுதிய கடித மொன்றில், இளைய தலைமுறையை விளையாட்டில் ஊக்குவிக்கும் பொருட்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அளவில் விளையாட்டு உள்கட்டமைப்புக்களை அதிகமாக  ஊக்கிவிக்க வேண்டும். விளையாட்டு கல்வியையும் பள்ளி கல்வி திட்டத்திட்டதுடன் ஒருங்கிணைக்க  வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த யோசனையை தாம் வரவேற்பதாகவும் இது குறித்து என்.சி.ஆர்.டி மற்றும் சி.பி.எஸ்.இ ஆணையம் மூலம் ஆராயப்படும் எனவும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

விளையாட்டையும் கல்வியில் ஒரு கட்டாய பாடத்திட்டம் ஆக்குவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என சச்சின் நம்பிக்கை வெளியிடுள்ளார்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus