Sunday, May 26th

Last update07:40:18 AM

டெக்கான் சார்ஜஸை வாங்கியது கம்லா லேண்ட்மார்க் நிறுவனம்

இந்திய ஐபிஎல் அணிகளில் ஒன்றான டெக்கான் சார்ஜஸை, கம்லா லேண்ட்மார்க் எனும் மும்பையின் ரியல் எஸ்டேட் நிறுவனம்

வாங்கியுள்ளது. இது தொடர்பிலான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காமர்ஷியல் புரோஜெக்டுக்கள், காணி, வீடு கட்டிட திட்டங்களில் ஈடுபட்டு வரும் கம்லா லேண்ட்மார்க் நிறுவனம் சார்பில் அதன் தலைவர் ரமேஷ் ஜெய்ன் டெக்கான் சார்ஜஸை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்தை மையமாக கொண்ட டெக்கான் சார்ஜஸை இதுவரை டெக்கான் குரோனிக்கல் நிறுவனம் நடத்தி வந்தது. எனினும் அணி நஷ்டத்தில் இருப்பதாகவும், வீரர்களுக்கு சம்பள பாக்கி தொடந்ர்து நிலவுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஐபிஎல் நிர்வாகம் டெக்கான் சார்ஜஸை ஏலத்தில் விட்டது. முதலில் வீடியோ கோர்ன் நிறுவனம் டெக்கானை வாங்க ஆர்வம் கொண்டது. எனினும் இறுதியில் கம்லா லேண்ட்மார்க் நிறுவனம் வாங்கியுள்ளது.

 

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus