T20 சாம்பியன்ஸ் லீக் : நேற்றைய போட்டிகளில் மும்பை, சென்னை அணிகள் தோல்வி
- Monday, 15 October 2012 02:00
நேற்று நடைபெற்ற சாம்பியன் லீக் டுவெண்டி20 போட்டிகளில் சென்னை, மும்பை என இரண்டு ஐபிஎல் அணிகளுமே தோல்வி அடைந்துள்ளன.
முதலாவது போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சிட்னி ஸிக்ஸர்ஸ் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை எடுத்தது. ஷேர்ன் வட்சன் 46 ஓட்டங்களையும், ஹென்ரிக்ஸ் 49 ஓட்டங்களையும் அதிரடியாக எடுத்தனர்.
பதிலுக்கு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. சுரேஷ் ரைனா 57 ஓட்டங்களையும், ப்லெஸிஸ் 43 ஓட்டங்களையும் எடுத்தனர்.
மற்றொரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் லயன்ஸ் அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில், 6 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு களமிறங்கிய லயன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது. இப்போட்டியிலும் பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட சச்சின் டெண்டுல்கர் 16 ரன்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
