தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு தகுதி அந்தஸ்து : இந்திய கிரிக்கெட் வாரியம்!
- Friday, 26 October 2012 15:13
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தகுதி அந்தஸ்து வழங்கி கவுரவித்து இருக்கிறது.
கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஒருநாள் டெஸ்ட், மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார். சமீபத்தில் நடந்த நியுசிலாந்து டெஸ்ட் தொடரில் 18 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இதுவரை பங்கேற்ற 40 ஒருநாள் போட்டிகளில் 56 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதற்கெல்லாம் அஸ்வினை சிறப்பிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அஸ்வினுக்கு தகுதி அந்தஸ்து வழங்கி கவுரவித்து உள்ளது. இதன் மூலம் அஸ்வினின் சம்பளம் சச்சின், தோணி, ஷேவாக் போன்று ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஆகும். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு பதில், அஸ்வின் இந்த தகுதி அந்தஸ்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
