Monday, May 20th

Last update06:17:27 PM

பங்காஜ் அத்வானி, மீண்டும் பில்லியார்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்

இந்தியாவின் பிரபல பில்லியார்ட்ஸ் விரர் பங்காஜ் அத்வானி, தனது 7வது பில்லியார்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளார்.

 இங்கிலாந்தின் லீட்ஸில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இங்கிலாந்தின் அனுபவம் மிக்க வீரர் மைக் ருசெல்லை அவர் தோற்கடித்தார்.

மைக் ருசெல் 11 தடவை சாம்பியன் பட்டம் வென்றவர். எனினும் 2009ம் ஆண்டு நடைபெற்ற நிபுணத்துவ பில்லியார்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்காஜிடம் தோல்வி அடைந்தார். இம்முறையும் தோல்வி அடைந்துள்ளார்.

தனது தாய்க்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாக கூறிய பங்காஜ்,  '7வது முறையாக சர்வதேச பட்டமொன்றை பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிபுணத்துவ ஸ்னூக்கர் போட்டித்தொடர் இக்கால பகுதியிலேயே நடைபெற்று வருகிறது. எனினும் அதற்கு செல்லாது லீட்ஸில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டது எனக்கு இப்போது நல்ல பயனை தந்துள்ளது' என்றார்.

மொத்தத்தில் பங்காஜ் அத்வானி பில்லியார்ட்ஸில் பெற்றூக்கொண்ட ஏழாவது பட்டம் இதுவாகும். அதே போன்று உலகலாவிய ரீதியில் எட்டாவது பட்டத்தை கைப்பற்றியுள்ளார். 2005 இல் அவர் தனது முதலாவது பில்லியார்ட்ஸ் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.

இந்தியாவின் மிகச்சிறந்த பில்லியார்ட் மற்றும் ஸ்னூக்கர் ஆல்ரவுண்டராக பங்காஜ் கருதப்படுகிறார். 2004ம் ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருதும், 2006ம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் 2009 இல் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

பூனேயில் பிரந்து குவைத்தில் சிறிது காலம் வளர்ந்த பின்னர் பெங்களூருக்கு குடியேறியவர் பங்காஜ் ஆவார். உலக  தரவரிசையில் 77வது இடத்தில் தற்போதூள்ளார்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus