திரைச்செய்திகள்

மெர்சல் 2 க்கான வேலைகளை சப்தமில்லாமல் செய்ய ஆரம்பித்துவிட்டார் அட்லீ. இந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பையும் அட்லீக்கே வழங்கப் போகிறாராம் விஜய்.

இப்படியொரு காம்பினேஷன் பேசப்படும் போதெல்லாம் முந்திக் கொள்வதுதான் நடிகைகளின் பளக்க வளக்கமாச்சே? இப்பவே காஜல் அகர்வால் ஒரு பக்கமும், கீர்த்தி சுரேஷ் இன்னொரு பக்கமும் நூல் விட ஆரம்பித்திருக்கிறார்களாம். சம்பந்தமே இல்லாமல் இன்னொரு நூலும் நடுவில் விழ... யாரென்று நோக்கினால், அட நம்ம சமந்தா.

ஏம்மா, கல்யாணம் ஆகிருச்சு. குழந்தை குட்டின்னு செட்டில் ஆகறதை விட்டுட்டு இதென்ன வெட்டிவேலை? (சமந்தா பர்த் டேவுக்கு கடன் வாங்கி கப்பலில் பார்ட்டி வைத்த இயக்குனர்கள் கூட இங்க இருக்காங்க. அது தெரியுமா மக்களே?)