உலகம்

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இனவழிப்பில் இருந்து தப்பிப்பதற்காக அண்டை நாடான வங்கதேசத்தில் இதுவரை 723 000 றோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்கி ஆதரிக்கா வங்கதேச அரசு இன்றுவரை திணறின் வருகின்றது. இந்நிலையில் மீளவும் ஒருமுறை பெரும்பாலான றோஹிங்கியா அகதிகளை மியான்மாருக்குத் திருப்பி அனுப்பத் தயாராக இருப்பதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் றோஹிங்கியா அகதிகளை மியான்மாருக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக மியான்மார் அரசுடன் வங்கதேசம் ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சில குடும்பங்களை இந்த ஒப்பந்த அடிப்படையில் வங்கதேசம் திருப்பி அனுப்பியும் இருந்தது.

இந்நிலையில் றோஹிங்கியா அகதிகள் மியான்மாருக்குத் திரும்பும் பட்சத்தில் அங்கு அவர்களுக்கு ஆபத்து காத்திருப்பதாக சர்வதேசம் கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.