அமெரிக்க திரைப்படத்திற்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டம் குறித்து சல்மான் ருஷ்டி
- Monday, 17 September 2012 10:20

பொருளாதார ரீதியில் மந்த நிலையில் உள்ள நாடுகளில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் இடையே புனித போர் எனும் சிந்தனை வேகமாகவும், விரைவாகவும் பிரபலமடைந்து வருவதாக
பிரித்தானிய எழுத்தாளர் சல்மான் ருஸ்டி விமர்சனம் வெளியிட்டுள்ளார். இஸ்லாத்துக்கு எதிராக சித்தரிக்கப்பட்டதென அண்மையில் வெளியிடப்பட்ட அமெரிக்க திரைப்படத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து எதிர்ப்பு வலுப்பெற்று வரும் நிலையில் நவீன இஸ்லாம் குறித்து சிஎன்என் - ஐபிஎன் ஊடகத்திற்கு அளித்த செவ்வியிலேயே ருஸ்டி இவ்வாறு தெரித்துள்ளார்.
இந்நாடுகளில் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய புரிந்துணர்வு இன்றி வாழும் வேலையில்லா பெருமளவிலான இளைஞர்களை ஜிகாத் வழிநடத்துவதாக அவர் கூறியுள்ளார். தற்போது வளர்ச்சி பெற்றிருப்பது கடுமையான இஸ்லாம். வஹாபி யோசனைகள் பரவி வருவது இதற்கான காரணமாக இருக்கலாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ள அவர் 'அதற்குரிய உதாரணங்களாக, டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் ராமாஜுன் கட்டுரைகள் நீக்கப்பட்டமை, எழுத்தாளர் Rohinton இன் நாவல், மும்பை பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து உடனடி நீக்கம் செய்யப்பட்டது. கார்டூனிஸ்ட் ராமானுஜம் மீதான தாக்குதல்கள் என்பவற்றை கூறலாம். இந்தியாவிடம் கிரியேட்டிவ் யோசனை ஏதும் இன்னமும் இருக்கிறதா என்பதில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது' என்கிறார்.
மேலும், 'பாதுகாப்பு தருமாறு கோரிக்கை விடுப்பது என்ன காரணத்திற்காக இருக்க முடியும்?, சிந்தனை உறுதியானதாக இருந்தால் விமர்சனங்களையும் எதிர்கொள்ள முடியும்' என அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை இத்திரைப்படத்திற்கான இஸ்லாமியர்களின் எதிர் தாக்குதல்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொல்வதாகவும், பழிவாங்கலாக மீண்டும் வன்முறையில் இறங்குவதை மன்னிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஈரானின் மத அமைப்பு ஒன்று, சல்மான் ருஷ்டியை படுகொலை செய்பவர்களுக்கு 3.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளதுடன், வேறு சில அமைப்புக்கள் 500,000 அமெரிக்க டாலர்கள் வரை தமது சன்மான தொகையை உயர்த்தியுள்ளன. இந்நிலையிலேயே ருஷ்டியின் புதிய கருத்துக்களை ஐபிஎன் ஊடகம் வெளியிட்டுள்ளது.
1988 இல் வெளியிடப்பட்ட தனது 'சாத்தானின் வேதம்' நாவல் மூலம் இஸ்லாமியர்கள் இடையே கடும் சர்ச்சைக்குள்ளான சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்து வளர்ந்த பிரித்தானிய எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
''சாத்தானின் வேதம்' புத்தகத்தை தற்போது மட்டும் வெளியிட்டிருந்தால் நிலைமை நிச்சயம் விபரீதமாக முடிந்திருக்கும்' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த அமெரிக்க திரைப்படத்துக்கு எதிரான போராட்டங்கள அடுத்து, அண்மையில் வெளியிடவிருந்த Islam : The Untold Story எனும் டாக்குமெண்டரியையும் தற்போது ஒத்திவைத்திருக்கிறது சேனல் 4 ஊடகம்.
இது இவ்வாறிருக்க; உலக அளவில் இஸ்லாத்தை தவிர்த்து அனைத்து மதவாதிகளுக்குள் எதில் ஒற்றுமை இருக்கின்றதோ இல்லையோ இஸ்லாத்தை எதிர்ப்பதிலும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளா சித்தரிப்பதிலும் ஏக ஒற்றுமையாக இருக்கின்றன என, தங்கள் விசனத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள் இஸ்லாமியர்கள்.
கும்பகோணம் நௌஷாத் அலி, என்பவரின் பெயரில் மின்னஞ்சல் வழியாகப் பகிரப்பட்டுள்ள கருத்துக்களில், பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூதரான டெர்ரி ஜோன்ஸின் திரைப்படமும் அதற்கு ஒத்து ஊதும், அமெரிக்க அரசாங்கமும் மும்முரமாக உள்ளது. அப் படத்தினை தன் விளம்பரத்திற்க்காக நீக்க மாட்டோம் என்று சொல்லும், கூகுளும், யூ டியூபும், அதனை எங்களால் தடுக்க முடியாது என்றும், அப்படி தடுப்பது பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதாகும் என்று கூறுவதோடு இது தங்கள் நாட்டின் அரசியல் நிலைக்கு எதிரானதாகும் என்று சாக்கு கூறும் ஹிலாரி ஒரு யூத பெண் என்பது கவனிக்கதக்கது.
ஜனாதிபதி தேர்தலில் இவர் கிறிஸ்துவர் இல்லை முஸ்லீமால் வளர்க்கப்பட்ட மறைமுக முஸ்லீம் என்ற விமர்ச்சனத்தை தவிர்க்க போராடிய ஒபாமா இந்த விஷயத்தில் தீவிரமாக கருத்து கூறினால் வரும் தேர்தலிலும் அந்த கதையை கையில் எடுத்துவிடுவார்களோ என்று பயந்து அதனை தவிர்ப்பதோடு ஆதரித்தும் வருகின்றார்.
இது தானா அமெரிக்காவின் அரசியல் நிலை என்று பார்த்தால் அப்படி இல்லை என்று பட்டவர்த்தனமாக புரிகிறது, எப்படியென்றால், விக்கீலீக்ஸ் பத்திரிக்கை செய்தியை தடுக்கவும் அதன் ஆசிரியரை கைது செய்ய தன் கைக்கூலிகளான ஐரோப்பிய நாடுகளுடம் இவர்கள் ஆடிய ஆட்டம் இவர்களின் பத்திரிக்கை சுதந்திர நிலையை தெளிவாக உலகிற்க்கு உணர்த்தும், தங்களது நாட்டின் நிலை இதுதான் என்றால் இவர்களை நடுநிலை வாதிகள்! என்று இன்னும் நம்பும் சில நாடுகள் எங்கே இவர்களை நம்பாமல் போய்விடுமோ என்றும் அதனால் உலக தலைமையகம் என்ற நிலைக்கு இன்னும் வில்லங்கம் வந்து விடப்போகிறதோ என்று ஒரு பொய்யை சொல்லி திரிகிறது. இதனையும் சில நாடுகள் ஏனோ நம்புவதாக காட்டிக்கொள்கின்றது. மேலும் சில நாடுகள் உணர்ந்தும் ஏனோ தங்களது அதிருப்தியை கூட தெரிவிக்காமல் உள்ளது.
நமது நாட்டில் தெளிவில்லாத சிலர் சமுதாய இயக்கம் என்று சொல்லி பின் செல்கின்றார்களே அதுபோல் உலக அளவிலும் இருப்பார்கள் போல். அல்லாஹ்வின் கிருபையால் மக்கள் தெளிவகவே உள்ளார்கள். அமெரிக்க தூதர்களுக்கும், பிரஜைகளுக்கும் அவர்கள் தங்கி இருக்கும் நாட்டின் அரசே பொறுப்பேற்க வேண்டும், இல்லை என்றால் அதன் பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று அகங்காரத்துடன் ஒபாமா கொக்கரித்துள்ளார்.
ரத்தத்தாலும், சதையாலும் ஆன உனது நாட்டின் ஒரு சாதாரண மனிதனை தாக்கினாலே உன்னாலே பொறுக்க முடியவில்லையே, தாக்குவேன் என்கிறாயே, அதுசரி என்றால் எங்களின் எல்லோரையும் விட எல்லாவற்றையும் விட எங்கள் ஊனிலும் உயிரிலும் கலந்து இருக்கும் எங்களின் ரசூலை இழிவாக சித்தரிப்பவன் மீது எங்களுக்கு எவ்வளவு ஆத்திரம் இருக்கும். அவனை நாங்கள் கருத்து சுதந்திரம் என்று மன்னிக்கவா முடியும் எனும் காட்டமான கேள்வியோடு தங்கள் கருத்தினைத் தெரிவித்துள்ளார்கள்.
