Wednesday, May 22nd

Last update01:06:43 PM

தமிழர்களின் உரிமைக்காக போராடும் சக்தியை புலம்பெயர் சமூகமே கொண்டுள்ளது : பேராசிரியர். யூசெப்பே புர்ஜியோ

புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை முறை, போராட்டம், மேற்கத்தேய சமூகத்துடனான அவர்களது தொடர்பு என்பவை குறித்து முதன்முறையாக இத்தாலிய மொழியில் ஆய்வு புத்தகமொன்றை கடந்த 2007ம் ஆண்டு வெளியிட்டார் இத்தாலிய பல்கலைக்கழக பேராசிரியர் யூசெப்பே புர்ஜியோ.

இவரது  எழுத்தாக்கங்கள், இத்தாலியில் இலங்கை அகதிகளின் புகலிட கோரிக்கைகளின் நியாயங்களை சட்டரீதியாக மேலும் வலுப்படுத்தி கொடுத்திருந்தது. கடந்த சனிக்கிழமை ஜெனிவாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளில் கலந்து கொண்டு இவர் சிறப்புரை ஆற்றியிருந்தார். (வீடியோவை இப்பதிவின் முடிவில் காணுங்கள்). இச்செவ்வியில் அவர் கூறியது.

'நான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமை ஆற்றுகிறேன். இதன் போது பெருமளவிலான தமிழ் நூல்கள் படிக்கும் வாய்ப்பு எனக்கு  கிடைத்தது. அப்போது,  இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகள், அவர்களது விடுதலை போராட்டம், அவர்களது பாரம்பரிய வரலாறு என்பவற்றை அறிய முடிந்தது. மேலும் இத்தாலிக்கு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பற்றியும் என்னால் ஆய்வு மேற்கொள்ள முடிந்தது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர்  La Diaspora Interculturale (புலம்பெயர் சமூகத்தின் உள்கலாச்சார தொடர்பு) எனும் புத்தகத்தை உருவாக்கினேன். இது இத்தாலியர்கள் - புலம்பெயர் தமிழர்களின் உள் கலாச்சார தொடர்புகள் பற்றியது. இரு மொழித்தொடர்புகள் சம்பந்தமான கல்வி சார்ந்த நூலாகவும் இதுவுள்ளது. இத்தாலியில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் தற்போதைய உண்மை நிலை பற்றிய ஆய்வு தகவல்களும் இதில் உண்டு.

ஐரோப்பிய நூலகங்கள் பலவற்றில் நீங்கள் இவற்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். தமிழர்கள் தொடர்பான ஒரே ஒரு இத்தாலிய மொழி புத்தகமாக இது இருக்கும் என நம்புகிறேன். இவற்றை விட நான் தமிழர்கள் போராட்டங்கள் தொடர்பில் பல கட்டுரைகளை எழுதிவருகின்றேன். அவற்றில் சிலவற்றை இணைய தளங்களிலும் காணலாம்.  

தாயக விடுதலைக்காக புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு, அவர்களது நடவடிக்கைகள் தொடர்பான புத்தகமொன்றை வடிவமைக்கவுள்ளேன். ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் குறித்த பதிவுகள், ஆக்கங்கள் உள்ளடக்கியதாக உருவாக்கப்படும் இப்புத்தத்தில், ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் தற்காலிக நிலமை குறித்தும் எழுதவுள்ளேன். அடுத்த வருடம் இப்புத்தகம் தயாராகும் என எதிர்பார்க்கிறேன்.

இலங்கையின் நிலைமை இன்னமும் மோசமாகவே உள்ளது. தமிழர்களின் தாயக நிலம், இலங்கை அரசினால் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழர்களின் போராட்டம் இன்னமும் முடியவில்லை. இப்போது தமிழர்களுக்கென ஒரு நாடு இல்லாதிருக்கலாம்.  ஆனால் தமிழினம் என்றொரு தேசிய இனம் அங்கு இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் அது பரவியிருக்கிறது. அதிலும் புலம்பெயர் தமிழினம் சக்திவாய்ந்தது என நான் கருதுகிறேன். தமிழர்களின் உரிமை போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் சக்தி இவர்களிடம் உண்டு. அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்கிறார் அவர்.  

வீடியோ செவ்வி :

 'La Diaspora Interculturale' நூல் பற்றிய மேலதிக விபரங்கள்

எழுத்தாளர் : Burgio, Giuseppe

மொழி : இத்தாலி

பதிப்பக ஆண்டு : 2007

Bibliography : Includes bibliographical references (p. [313]-327).

Contents : Table of contents (source: Casalini)

Series : Scienze dell'educazione ; 86
           Scienze dell'educazione (Pisa, Italy) ; 86.

Subjects: Tamil (Indic people) > Italy > Social conditions.
            Immigrants > Italy > Social conditions.
            Italy > Ethnic relations.
            Sri Lanka > Emigration and immigration.
            Italy > Emigration and immigration.

ISBN : 9788846717511
        8846717511

 

தொடர்பு செய்தி : மீண்டும் ஒருமுறை ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த புலம்பெயர் தமிழர்களின் குரல்

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus