Friday, May 24th

Last update07:55:52 PM

Gangnam Style என்றால் என்ன? : உங்களால் இப்படி நடனமாட முடியுமா?

தென்கொரிய ரேப் பாடகர் Psy யின் கங்னம் ஸ்டைல் வீடியோ பாடல் உலகின் பட்டி தொட்டியெல்லாம்  பிரலபமாகியிருந்ததை அறிந்திருப்பீர்கள்.

நேற்று அக்.17ம் திகதி வரை 480 மில்லியன் தடவை இப்பாடல் யூடியூப்பில் பார்வையிடப்பட்டுள்ளது.  யூடியூப்பில் மிக அதிகமான தடவை பார்க்கப்பட்ட யூடியூப் வீடியோக்கள் வரிசையில் இது 7வது இடத்தை பிடித்துள்ளது.

கேவலமான நடன அசைவுகள் என ஜப்பானால் இவ்வீடியோ பாடல் வெளியிடப்பட்ட சில தினங்களிலேயே நிராகரிக்கப்பட்டது. ஆனால் இன்று உலகில் அதிகமானோரால் ஈர்க்கப்பட்ட நடன அசைவுகளில் ஒன்றாக  இப்பாடலில் வரும் குதிரை ஓட்டும் நடனம் பிரபல்யம் பெற்றுள்ளது. பாடகர் Psy மற்றும் அவரது நடன பயிற்றுனர் இணைந்து இந்த குதிரை நடனத்திற்காக பல நாள் பயிற்சி எடுத்திருக்கின்றனர். முன்னர் பண்டா மற்றும் கங்காரு போன்ற விலங்குகளின் நடை அசைவுகளையும் பரிசீலித்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் இறுதியில் குதிரை ஓட்டமே இப்பாட்டுக்கு பொருந்தியிருக்கிறது.

முதற்தடவையாக நான் இந்த நடனத்தை செய்கையில் எனக்கே வெட்கமாக இருந்தது. என்னுடன் ஆடியவர்களுக்கும் இதே வெட்கம் இருந்தது. இப்படி எல்லோருமே  வெட்கப்பட தொடங்கியதால், அதையே தொடர்ந்து நடனமாட ஆர்வமாக இருந்தோம் என்கிறார் Psy.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன், கூகுள் சேர்மென் எரிக் ஷிமித், யேசு கிறிஸ்துவின் மறு அவதாரம் என கூறிக்கொள்ளும் inri Cristo என பல உலக பிரபலங்களும் அக்குதிரை நடனத்தை ஆடிப்பார்த்திருக்கிறார்கள். நேற்று, பிக் பி அமிதாப் பச்சன், ஷாருக்கான், கத்ரீனா கைஃப் இணைந்து இப்படி நடனமாடினார்கள்.


தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், ஒபாமா - ரூம்னியின் 'இமிடேட்' கதாபாத்திரங்களை கொண்டு கங்னம் ஸ்டைல் வீடியோ பாடலை உருவாக்கியிருந்தார்கள்.

'ஒபாமா' ஸ்டைல் என ரூம்னியின் ஆதரவாளர்களும்,  'ரூம்னி' ஸ்டைல் என ஒபாமவின் ஆதரவாளர்களும் போட்டிக்கு வெளியிட்டிருந்த இவ்விரு வீடியோக்களும் பெரிதும் ஊடக கவனம் பெற்றிருந்தது. யாருடைய கேலி வீடியோ சிறப்பாக இருக்கிறது என டைம்ஸ் இணையத்தளம் ஒரு வாக்கெடுப்பையே நடத்து முடித்திருந்தது.

Gangnam Style  என்றால் என்ன?

 தென்கொரியாவின் தலைநகர் சியோலில் Gangnam எனும் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்களுடைய வாழ்க்கை பழக்கவழக்கம் (Life style) என்பது எப்படி இருக்கும் என கேலி செய்யவே இப்பாடலுக்கு Gangnam Syle என பெயரிடப்பட்டது.

இந்த Gangnam மாவட்டத்தில் இருக்கும் பொதுமக்கள் பொதுவாக இந்தளவு ஆட்டம் பாட்டம் என குதூகலமாக இருக்கமாட்டர்களாம். ஆனால் எப்போதும் தம்மால் முடியாததை முயற்சித்து கொண்டிருப்பார்களாம். அதனால் அதை ஒருவித கேலிக்கு உள்ளாக்கும் வகையில் இந்த பாட்டை உருவாக்கியதாக கூறுகிறார்கள் Psy குழுவினர். 'எப்போது நாகரீகமாக இருக்க வேண்டும், எப்போது காட்டு மனிதனாக இருக்க வேண்டும் எனத்தெரிந்த காதலியை பற்றி இப்பாடல் பேசுகிறது. இதில் வரும் 'Oppan Gangnam Style' எனும் வரிகள் மிக பிரபலம். 'Oppa' என்றால் கொரிய மொழியில், தோழன் அல்லது சகோதரன் என பொருள் படுகிறது. பொதுவாக தமது நல்ல நண்பர்களை அல்லது சகோதரர்களை Oppa என யுவதிகள் அழைப்பார்கள். தன்னை  சகோதரன் என்ற முறையில் கூறி இப்பாடலை Psy பாடியிருப்பார்.

ரேப் பாடகர் Psy

ஆசியா மற்றும் அமெரிக்காவின் தற்கால நகர வாழ்க்கையை இப்பாடல் நன்றாகவே படம்பிடித்து காட்டுவதாக காமன் சென்ஸ் மீடியா விமர்சித்துள்ளது. எனினும் இளைஞர்கள், பருவவயதினரிடையே சில  பாலியல் இச்சைகளையும் தோற்றுவிக்கும் விதமாக வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருப்பது, ஆரோக்கியமானதல்ல என மாற்று விமர்சனமும் உண்டு.

 இந்த Gangnam Style பாடலின் வீடியோ நடனத்தை எப்போதாவது நீங்கள் சொந்தமாக முயற்சித்து பார்த்திருக்கிறீர்களா? இப்பாடலுக்கான நடனத்தை கற்றுக்கொடுக்கிறார் இப்பெண். ஒரு முறை இதை ஃபலோ செய்து பாருங்கள். கங்னம் ஸ்டைல் உங்களையும் சட்டென இலகுவாக வீழ்த்திவிடும். இதுவரை ஒரு மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்து நடனம் கற்றிருக்கிறார்கள்.  அதாவது ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தடவை இந்த வீடியோ பார்வையிடப்பட்டிருக்கிறது.
 

 

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

 

4தமிழ்மீடியாவின் இப்பதிவுகளையும் வாசித்து செல்லுங்கள் :

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus