சொந்த முயற்சியை தவிர யார் தயவிலும் நான் வளரவில்லை : ஜி.வி.பிரகாஷ்
- Tuesday, 25 September 2012 23:36

வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளராக தடம் பதித்தவர் இசை அமைப்பாளர் ஜிவி.பிரகாஷ். இவர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் சகோதரி ரெஹானாவின் புதலவர்.
இசைப் புயலின் நிழலில் உங்களுக்கு வாய்ப்புத் தேடி வந்திருக்குமே என்றபோது,
"அதுதான் இல்லை, எனக்கு யார் நிழலிலும் வாய்ப்பு தானாக கிடைக்கவில்லை. காரணம் நான் குழந்தையாக இருக்கும் போதே அப்பா, அம்மா டிவோர்ஸ் பெற்று விட்டார்கள். நான் அப்பாவிடம்தான் வளர்ந்தேன். எனவே, எனக்கு இசைப்புயலின் நிழலில் வளர்ந்ததால் வாய்ப்பு தேடிவந்தது என்பது உண்மையல்ல" என்கிறார்.
தொடர்ந்து கேள்விகளை தொடுத்த பொது,
இயக்குனர் விஜயின் படங்களுக்கு நீங்கள்தான் இசை அமைக்கிறீர்கள், ரகசியம் என்ன?
ரகசியம் ஒன்றுமில்லை, முதலில் நன்றாக அமைந்து விட்டது காரணமாக இருக்கலாம். பிறகு இந்த காம்பினேசன் நன்றாக வொர்க் அவுட்டாகிறது என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். விஜய் சார் இயக்கத்தில் மியுசிக் என்றால் எனக்கு ரொம்ப ப்ரீயா இருக்கும். என்னுடைய முதல் பட வாய்ப்பு எனக்கு கொடுத்த வசந்த பாலன் சார் இவ்வளவு சின்ன பையனாக இருக்கிறான் என்று யோசிக்காமல் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவருடன் வேலை பார்க்கும் போதும் நான் வயது வித்தியாசம் இன்றி நன்றாகவே சுதந்திரமாக வேலை பார்த்தேன்.
இப்படி நமக்கு நல்ல கம்பர்டான பீலிங் கிடைத்தால் கூட்டணித் தொடர்வதில் ஆச்சரியம் இல்லை. செல்வராகவனின் மயக்கம் என்ன படத்தில் ரொம்ப சுதந்திரமாக இசை அமைத்தேன். நான் போட்ட டியுனுக்கு தனுஷ் நான் பாடல் எழுதுகிறேன் என்று ஆவலாக முன்வந்து எழுதினார். அந்த பாடல்தான் ஓட ஓட! அப்படித்தான் நட்பு முறையில் உரிமையாக செல்வராகவன் பாடல் பாடினார் எழுதினார், அதேபோல தனுஷ் பாடல் எழுதினார், பாடினார். எல்லாமே ஒரு கம்பர்ட் பீளிங்கில் வருவதுதான்.
பாட தெரியாதவர்களும் கூட இசை அமைப்பாளர் முயற்சியில் பாடலாம் எனலாமா?
பாடத் தெரியாதவர்களும் கூட இசை அமைப்பாளர்கள் முயற்சி எடுத்தால் பாடவைக்கலாம். அனால் அது தொடர முடியாது. ஒரு வித்தியாசம், ஒரு முயற்சி என்பதன் அடிப்படையில் அது சாத்தியமாகலாம். ஆனால், அதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் அந்த முயற்சியைத் தொடர்ந்தால் வீண் தோல்விதான் ஏற்படும். அது இசை அமைப்பாளர்களுக்கு கெட்ட பெயரைக் கூட சம்பாதித்துக் கொடுத்து விடும்.
உங்களுக்கு பாடல் எழுதும் எண்ணம் இருக்கிறதா?
எனக்கு சுத்தமாக வராத விஷயத்தை நான் ஏன் செய்ய வேண்டும்? இப்போது நான் 100 சதவிகிதம் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து டியூன் போடுகிறேன். பாடலாசிரியர் 100 சதவிகிதம் முயற்சி செய்து பாடல் எழுதுகிறார். இயக்குனர் 100 சதவிகிதம் முயற்சியோடு பாடலைப் படமாக்குகிறார் நடிகர் 100 சதவிகிதம் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறார்.எனக்கு இது போதுமே, வராத விஷயத்தை நான் ஏன் கையில் எடுக்கவேண்டும், வெயிலோடு விளையாடி பாடல் படமாக்கப் பட்ட விதம் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்தது. என்னுடைய முதல் படத்துக்கு இப்படிப் படமாக்கப் படுவது தேவையாக இருந்தது என்று கூட சொல்லலாம்.
மேலும், எனக்குத் தேவையானது, என்னால் முடிவது என்று தீர்க்கமாகத் தீர்மானித்து முடிவுகள் எடுக்கிறேன். அப்படித்தான் +2 க்கு மேல் நம்மால் படிக்க முடியாது என்று முடிவெடுத்து இசைதான் இனி நமக்கு எல்லாம் என்று முடிவெடுத்தேன். அதனபடி முயற்சியும் செய்தேன்" என்று சொல்லும் ஜிவி.பிரகாஷ் அடுத்த வருடம் சைந்தவியின் கரம் பிடிக்க உள்ளார்.
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படிக்கும் போதே இருவருக்கும் நல்ல பழக்கம் என்றும், பின்னர் அது காதலாக மாறியது என்றும் கூறும் ஜிவி.பிரகாஷின் ஜூனியராக பள்ளியில் படித்தாராம் பிரபல பாடகி சைந்தவி.
ஜி.வி.பிரகாஷ் இசையில் தாண்டவம், இன்னமும் ஓரிரு தினங்களில் திரைக்கு வரவவிருப்பது குறிப்பிடத்தக்கது.

.jpg)