Sunday, May 19th

Last update07:17:27 AM

'இசை' : ஷேக்ஸ்பியர் கவிதைகளை மாடர்ன் சினிமா எடுத்தது போல இருக்கும்! : எஸ்ஜே.சூர்யா

ஷேக்ஸ்பியர் கவிதைகளை மாடர்ன் சினிமா எடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் என்னுடைய இசை திரைப்படம் என்கிறார் இயக்குனர் எஸ்ஜே.சூர்யா. மேலும் அவர் தமது இசை படம் பற்றிப்  பேசுகையில்,

    "எல்லோரும் படம் எடுக்கும் முன் கதையை வெளியில் சொல்ல பயப்படுவார்கள், எனக்கு அந்த பயமில்லை. பார்க்கப் போனால் நான் கதையை சொல்லிவிட்டுத்தான் படமே எடுக்க ஆரம்பிப்பேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் என்னுடைய இசை படத்திற்கு வொர்க் அவுட் செய்திருக்கிறேன்.

     கதை என்று பார்த்தால் ஏற்கனவே கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும்  இசையமைப்பாளர்  ஒருவர். அவரின் இடத்தைப் பிடிக்கிறான் புதிய இசை அமைப்பாளராக களம் இறங்கும் இளைஞர். இதனால் மிகுந்த மனவலிக்கு ஆளாகிறார் மூத்த இசை அமைப்பாளர். இருவருக்கும் இடையில் பனிப்போர் நடக்கிறது.

   இளைய இசை அமைப்பாளர், தமது காதல் மனைவியுடன் சேர்ந்து அந்த பனிப்போரை எப்படி முறியடிக்கிறான் என்பதுதான் கதை. முன்னம் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள மூத்தவர் பாடுபடுவதும், முதல் இடத்திலேயே நீடிக்க இளைய இசை அமைப்பாளர் பாடுபடுவதுமாக கதை வெகு சுவாராஸ்யமாக நகரும்.  வழக்கமாக் எனது பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். அதனால்தான் நான் எப்போதும் எங்கும் கதையை சொல்லத் தயங்கியதில்லை. எப்போதும் தனித்தன்மை நபருக்கு நபர் வேறுபடும். அப்படித்தான் கதையில் என் தனித்தன்மை தெரியும்.


    முதன் முறையாக நான் இசை அமைக்கிறேன், எனது இசையில் எனக்குப் பிடித்தகவிஞர்  வாலி  பாடல்கள் எழுதி இருக்கிறார். ஷேக்ஸ்பியர் கவிதைகளை மாடர்ன் படமாக எடுத்தல் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இசை படமும் இருக்கும். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய வனப் பகுதிகளில் லோக்கேசன்ஸ்  தேடிதேடி படப்பிடிப்பு நடத்தி வருகிறேன்" என்கறார் எஸ்ஜே. சூர்யா. 

தமன்னா புதிய படங்கள் சில
Y G மகேந்திரனின் ரகசியம் பரம ரகசியம் நாடகம் புகைப்படங்கள்
புத்தகம் திரைப்படத்தின் ஷுட்டிங்க் ஸ்பாட் புகைப்படங்கள்

     நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே.சூர்யா, விஜய் அஜீத் இவர்களுக்கு வெற்றிப் படங்களைக்  கொடுத்தவர். பின்னர் இவர் கதைக்கு  இவரே நடித்தும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார். பின்னர் மற்றவர் கதைகளுக்கும் நடிக்க ஆரம்பித்தார். நடுவில் சில வருடங்கள் காணாமலும் போனார்.

    பின்னர் இயக்குனர் ஷங்கரின் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர், தன்னை மெருகேற்றிக் கொண்டதோடு, இசையையும் முழுமையாகக் கற்றுக் கொண்டு, தனது இசை படத்திற்கு தானே இசை அமைக்கவும் முடிவு  செய்து, இசை படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.   

மேலும் சினி செய்திகள்





 

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus