திரைச்செய்திகள்
Typography

நான்... என் அரசு... என்று கூறி வந்தவர்களின் ஸ்டைலுக்கு சற்றும் குறைவில்லாமல்தான் இருந்தது விஷாலின் பேச்சும்.

‘நான் சொல்கிறேன். நான் முடிவெடுத்திருக்கிறேன்’ என்றே கூறி வந்தார் ஆரம்ப காலத்தில்.

இரண்டு முறை தியேட்டர் ஸ்டிரைக் அறிவித்தும் அவரால் நடத்த முடியாமல் போனதற்கு காரணமும் இந்த ‘நான்’ என்கிற சொல்தான்.

ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை. தயாரிப்பாளர் சங்க முக்கிய கூட்டம் ஒன்றில், ‘நீங்க சொல்லுங்க தலைவரே...’ என்று கேட்டவர்களிடம், ‘தாணு சார் இருக்காங்க, அபிராமி ராமநாதன் இருக்காங்க... அவங்கள்லாம் என்ன சொல்றாங்களோ, அதுதான்’ என்றாராம் தன்னடக்கமாக.

கம்பி வளையலேன்னாலும் கங்கு வளைய வைக்கும்.

Most Read