திரைச்செய்திகள்
Typography

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் இளைய மகளும் இயக்குனருமான சவுந்தர்யா இந்த தகவலை ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். மேலும், ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்து அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா புத்தகம் ஒன்றினை எழுதி வருவதாகவும் சவுந்தர்யா தெரிவித்துள்ளார். 

பேருந்து நடத்துனராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்த ரஜினியின் வாழ்க்கை பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் என்பதால் அதை படமாக்கும் திட்டம் உள்ளது என்றும் சவுந்தர்யா தெரிவித்துள்ளார். கபாலி படத்தின் வெற்றியால் இந்த கருத்து வலுப்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்