திரைச்செய்திகள்

சந்தானத்திற்கு சர்வ மங்கள யோகம் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவரும் சிவகார்த்திகேயனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு குட் பை சொல்லிவிட்டு சினிமாவுக்கு வந்தாலும், இன்று டாப் 5 ல் ஒருவராகிவிட்டார் சிவா. ஆனால் சந்தானத்தின் பொசிஷன் டவுன் டவுன்! உருண்டு புரண்டு போராடி ஒருவழியாக தில்லுக்கு துட்டு என்ற ஹிட்டு கொடுத்துவிட்டார். அப்புறமென்ன? வண்டி டாப் கியர்தான். பிரபல தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் சந்தானத்தை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அவர் போட்ட பிள்ளையார் சுழி அப்படியே படு பயங்கரமாக வொர்க் அவுட் ஆகிவிட்டது. லைக்கா உள்ளிட்ட சில பிரபல நிறுவனங்களும் சந்தானத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. முகத்திற்கு நேரே சந்தித்துக் கொண்டாலும், பார்க்காதது போல கிராஸ் ஆகிவிடும் சிவாவும் சந்தானமும் இனி போஸ்டர்களில் முட்டிக் கொண்டாலும் ஆச்சர்யமில்லை. சினிமா அப்படிதானே? 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.