திரைச்செய்திகள்
Typography

கதையும் நல்லாயிருக்கணும், கால்ஷீட்டும் குறைவாயிருக்கணும், சம்பளமும் வெயிட்டா இருக்கணும்...

இம்மூன்று கொள்கைகளுக்கு உட்பட்டுதான் நடிக்கவே சம்மதிக்கிறாராம் ரஜினி.

காலா படத்தின் பெரும்பாலான பகுதிகளில் தலைவருக்கு பதில் டூப்பையே பயன்படுத்துவதாக வாக்குறுதி தந்ததால்தான் செகன்ட் இன்னிங்ஸ்சுக்கு முன்னேறினார் பா.ரஞ்சித்.

கிட்டத்தட்ட அதே போலொரு சலுகையை வழங்கியிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜும்.

இந்தப்படத்திற்காக ரஜினி நேரடியாக கேமிரா முன் நிற்கப்போவது வெறும் இருபதே நாட்கள்தான் என்கிறது அதிகாரபூர்வமற்ற அநாவசியத் தகவல்கள்.

அப்படின்னா... வதந்திக்கு கால் முளைச்சா உண்மை. இல்லேன்னா வதந்திதான்...!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்