திரைச்செய்திகள்
Typography

அந்த டாப் ஹீரோ முதன் முறையாக மருமகன் வீட்டுக்கே நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் கொடைச்சல் மெனு!  மருமகன்தானே?

இதிலென்ன ஆச்சர்யம் என்பவர்களுக்கு... நிஜமாகவே இது ஆச்சர்யம்தான். இதற்கு முன் யார் வீட்டுக்கும் அவர் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து சொன்னதேயில்லை. ஏன் இப்படி? மருமகனின் போக்கு வர வர சரியில்லை. விட்டால் கன்னுக்குட்டி குடும்பம் என்கிற கயிற்றை அறுத்துக் கொண்டு கிளம்பிவிடுமே என்கிற அச்சத்தின் காரணமாகதான் இந்த நேரடி விசிட்! இருவரும் சில மணி நேரம் மனம் விட்டு பேசியதாகவும் தகவல்கள் வருகின்றன. இதற்கப்புறமாவது மருமகன் புரிந்து கொள்வாரா? அல்லது அதே அழிச்சாட்டியம் தொடருமா? காலம்தான் கணிக்க வேண்டும். அப்படியே இன்னொரு தகவல். சமீபத்தில் விவகாரத்துக்காக கோர்ட்டுக்கு போன தம்பதியின் வாழ்வில் குறுக்கே வந்தவரும் இந்த மருமகன்தானாம். இது குறித்தும் வீட்டில் கெடுபிடி ஸ்டார்ட்... என்ன ஆகப்போகிறதோ? 

BLOG COMMENTS POWERED BY DISQUS