திரைச்செய்திகள்

ஐயோ பாவம்... ஒரு காலத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்த தேனான்டாள் பிலிம்ஸ், கடும் நெருக்கடியில் இருக்கிறது.

எல்லாம் மெர்சல் செய்த மாயம். அதற்கப்புறம் அதே நிறுவனம் தயாரிப்பதாக இருந்த பல படங்கள் டிராப்.

வேறு தயாரிப்பு நிறுவன படங்களை வாங்கி வெளியிடுவதாக திட்டமிட்டதிலும் சொதப்பல்.

அண்மையில் இந்த பிரச்சனையில் சிக்கிக் கொண்ட படம் நேமிசந்த் ஜபக் தயாரித்த டிக்டிக்டிக்.

நம்மால் இயலாது. நீங்களே ரிலீஸ் பண்ணிக்கோங்க என்று அவரிடமே படத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

படத்தின் ஹீரோ ஜெயம் ரவிதான், நம்ம படம் இப்படி பந்தாடப்படுதே என்று கலங்கிப் போயிருக்கிறார்.