திரைச்செய்திகள்
Typography

யாரெல்லாம் வளர்ந்து வரும் ஹீரோக்களோ, அவர்களிடமெல்லாம் வலிய சென்று பிரண்ட்ஷிப் வைத்துக் கொள்ளும் வழக்கம் சீயான் விக்ரமுக்கு உண்டு.

அதென்னவோ தெரியவில்லை. இவர் நட்பு வலுப்பெற பெற, சம்பந்தப்பட்ட யங் ஹீரோவின் மார்க்கெட் ஆட்டோமேடிக்காக கீழே இறங்க ஆரம்பிக்கும். இதன் சூட்சுமத்தை யாரும் ஆராய்வதும் இல்லை. அப்படியே மார்க்கெட் சரிந்து மணலாய் தேய்ந்தபின், சீயான் அந்தப் போக்குவரத்தை அப்படியே துண்டித்துவிடுவார். தமிழ்சினிமாவில் இருபது ஆண்டு கால வரலாற்றை தெரிந்தவர்களுக்கு இந்த கடுகு சைஸ் களேபரம் கண்ணுக்கு பளிச்சென்று தெரியும். சரி... இப்போது என்ன வந்தது? சீயானின் நட்பு வட்டத்தில் தாறுமாறாக குழைந்து கிடக்கிறார் சிவகார்த்திகேயன். சூட்சுமம் தெரியாமல் சூடத்தை கொளுத்துகிறாரே சிவா. யாராவது எடுத்துச் சொன்னா தேவலாம்! 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்