திரைச்செய்திகள்

விட்டால் ஜெயம் ரவி அழுதே விடுவார் போலிருக்கிறது.

அவர் நடித்து எப்பவோ ரிலீசுக்கு தயாராகிவிட்ட ‘டிக் டிக் டிக்’ படம், சிந்துபாத் கன்னித்தீவுக்கு கிளம்பியதை விடவும் மோசமான பயணத்தை சந்தித்து வருகிறது.

‘இந்த ஸ்டிரைக் வந்து என் ரிலீசை ஊத்தி மூடிடுச்சே’ என்று டிக்டிக்டிக் தயாரிப்பாளர் புலம்பினார் அல்லவா? ஸ்டிரைக் முடிந்ததும் ‘முதல் மரியாதை உங்களுக்குதான்.

வாங்க தியேட்டருக்கு போகலாம்’ என்று கையை பிடித்து இழுந்தாலும், கிளம்ப மாட்டேன் என்கிறாராம் தயாரிப்பாளர்.

‘எக்சாம் டைம், முரட்டுக்குத்து வந்திருச்சே, அப்புறம் காலா கூட வருதில்ல?’ என்று பல பதில்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறாராம்.

மரம் குலுங்கி மல்கோவா விழுறதுன்னா அது இப்ப நடக்கப் போறதில்ல. இந்த டிலேவால் அதிகம் அப்செட் ஆகிக்கிடப்பவர் ஜெயம் ரவிதான்!

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது