‘எழுமின்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு விஷால், சிம்பு, கார்த்தி மூவரும் வந்ததுதான் ஹைலைட்.
அதிலும் சிம்பு பேச்சு செம ஹாட். “பிள்ளைகளை யாரும் ஸ்கூலுக்கு அனுப்பாதீங்க.
அங்க போட்டியையும் பொறாமையையும்தான் சொல்லித்தர்றாங்க” என்கிற கருத்தை கைதட்டி வரவேற்றது கூட்டம்.
“நீட் பற்றியெல்லாம் கூட பேசலாம்னு நினைச்சேன். அது அரசியலாயிடும்னு அமைதியா இருந்திட்டேன்” என்று பிறகு தனக்கு நெருக்கமான திரையுலக பிரமுகர்களிடம் பகிர்ந்து கொண்டாராம் சிம்பு.
அடுத்த மேடையில வச்சுக்கங்க கச்சேரியை!