அஞ்சலிக்கு மு.களஞ்சியத்தால் ஏற்பட்டு வந்த மிரட்டல் உருட்டல் முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டது.
அப்படியிருந்தும் பொது இடங்களுக்கு வருவதையோ, நிருபர்களை சந்திப்பதையோ தவிர்த்தே வருகிறார் அவர்.
சமீபத்தில் அவர் நடித்த காளி படத்திற்காக சேனல் பிரமோஷன், பிரஸ்மீட்டுகளுக்கு அஞ்சலியை வரவழைப்பதற்குள் ஆளே நூலாகிற அளவுக்கு வெறுத்துப்போய்விட்டார்கள் சம்பந்தப்பட்ட படக்குழுவினர்.
“நான் இப்படிதான்... முடிஞ்சா படம் கொடுக்க சொல்லுங்க. இல்லேன்னா அலையல...” என்கிறாராம் அஞ்சலி. என்னாச்சும்மா உங்களுக்கு?