இந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறது ‘செம’. இப்படத்தின் தயாரிப்பாளரான பாண்டிராஜின் பூதக்கண்(ணுக்குள்) சிக்கிய சிபாரிசுடன் களம் இறங்கிய புதுமுகம் அர்த்தனாவுக்கு அதே பாண்டிராஜே கசப்பு ஜுஸ் வழங்கி கவிழ்த்துவிட்டுவிடுவார் போலிருக்கிறது.
யெஸ்... இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்த அர்த்தனாவின் அழகுக்கு கோடம்பாக்கமே கர்சீப் போட்டு காத்திருக்கிறது.
மீண்டும் தனது இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவரை ஹீரோயினாக்கினார் பாண்டிராஜ்.
அதோடு விட்டிருந்தால் ஓகே. விக்ராந்துடன் நடிக்கவும் சிபாரிசு செய்தாராம். ஜி.வி.க்கு அப்புறம் கார்த்தி.
ஆஹா...வண்டி டாப் கியரில் போகுதே என்று சந்தோஷப்பட்ட அர்த்தனாவுக்கு “விக்ராந்துடன் ஜோடி சேரும்மா” என்றால் எப்படியிருக்கும்? குருபக்திக்கு இணங்கி ஓகே சொல்லிவிட்டார்.