ஆபாச படம்தான். ஆனால் கல்லாவை நிரப்புகிற வித்தையே அதுதான் என்பதை புரிந்து கொண்டார் இருட்டறையில் முரட்டுக்குத்து இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.
மெல்ல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம், “பார்ட் 2 போகலாமா?” என்று கேட்க... நோ நோ என்று இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டாராம் ஞானவேல்ராஜா.
“பட்ட அசிங்கமெல்லாம் போதும்ங்க. கையில் இருக்கிற இதே டைப் படங்களை மட்டும் முடிச்சுட்டு இதோட விட்ற வேண்டியதுதான்.
உங்களுக்கு பார்ட் 2 ஆசை இருந்தா நீங்களே தயாரிச்சு இயக்குங்க.
நோ அப்ஜெக்ஷன். இனி நம்ப முதலீட்டுல இப்படிப்பட்ட படங்களுக்கு இடம் இல்ல” என்றாராம்.
முகத்துல சாணம் அடிக்கப்பட்ட பிறகுதான் பல பேருக்கு ஞானமே பிறக்குது!