ரஜினியா, டைனோசரா? யாரை யார் வெல்வார்கள் என்கிற கேள்வியை எழுப்பிவிட்டது யதார்த்தம்.
ஜுலை 7 ந் தேதி திரைக்கு வரவிருக்கும் காலா படத்திற்கு பெரும் தொகையை அட்வான்சாக கேட்கிறது கம்பெனி.
தியேட்டர்காரர்கள் அவ்வளவு தொகையை கொடுக்க முன் வந்தாலும் இன்னொரு இனிப்புத் துண்டு வாயோரம் வந்து “வச்சுக்கோ என்னை...” என்றால் எப்படியிருக்கும்?
அப்படிதான் அதே நாளில் வெளிவரப்போகும் பிரபல ஹாலிவுட் படமான ‘ஜுராசிக் வேல்டு’ இருக்கப் போகிறது.
எந்த தியேட்டர்களிலும் அவர்கள் முன் பணம் கேட்கவில்லையாம்.
அதனாலும், குழந்தைகளை எளிதில் கவரவிருக்கும் படம் என்பதாலும் தியேட்டர்காரர்களின் சாய்ஸ், டைனோசருக்கே!