தயாரிப்பாளர் சங்கத்தின் அதிருப்தி காரணமாக செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து சத்யஜோதி தியாகராஜன் விலகுகிற மூடில் இருந்தாராம்.
அவரை சந்தித்த சில முக்கியஸ்தர்கள், “அஜீத்தின் விஸ்வாசம் ரிலீஸ் நேரத்தில் பதவியிலிருப்பது நல்லது.
இல்லையென்றால் முந்தைய தோல்விக்காக நிறைய பஞ்சாயத்துகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார்களாம்.
அதுவும் சரிதான் என்ற முடிவுக்கு வந்த தியாகராஜன் தனது கோபக் கடிதத்தை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டதாக தகவல்.
மிக சமீபத்தில் ராஜினாமா செய்த தேனப்பன், சங்க செயல்பாடுகளை இஷ்டத்திற்கும் விட்டு வெளுத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி நிறைய பேர் கிளம்பினால், இமேஜ் நொறுங்குமே என்பதால் விஷால் தரப்பு வெகுவாக அப்செட்!