காலா ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் ஒரு கசமுசா. மீடியாவின் மீது கடும் கோபத்திலிருக்கிறார் தனுஷின் மேனேஜர் விநோத்.
ஏன்? இவர்தான் காலா விளம்பரங்களையும் கவனித்து வருகிறார். பிரபல மாலை நாளிதழ் ஒன்றில், ‘காலா 7 ந் தேதி வருவது சந்தேகம்தான்’ என்று செய்தி வெளியாகிவிட்டது.
உடனே அந்த நாளிதழுக்கு காலா விளம்பரத்தை நிறுத்திவிட்டார் விநோத்.
ஏனென்று கேட்ட நாளிதழ் நிர்வாகத்தை நேரில் வரச்சொன்னவர், “நாங்க 7 ந் தேதி ரிலீஸ்னு கொடுத்த விளம்பரம் உங்க பேஜ்ல வருது.
அதே பேப்பர்ல காலா வராதுன்னு ஒரு செய்தி வெளியிடுறீங்க. கோபம் வராதா? அதான்...” என்றவர், “நீங்க என்ன வேணும்னாலும் எழுதிக்கோங்க.
உங்களுக்கு விளம்பரம் இல்ல” என்றாராம் விடாப்பிடியாக. சிரித்துக் கொண்டே திரும்பிவிட்டது நிர்வாகம். தலைவர் எவ்வழியோ, மேனேஜர்களும் அவ்வழியே!