திரைச்செய்திகள்
Typography

காலா வெற்றி தோல்வி பற்றிய எந்த சலசலப்புக்கும் ஆளாகாமல் டார்ஜிலிங் கிளம்பிவிட்டார் ரஜினி.

போகிற நேரத்தில் ரஞ்சித்திற்கு போன் செய்தவர், “கவலையே படாதீங்க. இந்த படம் பிய்ச்சுகிட்டு ஓடும்” என்று கூறிவிட்டுதான் கிளம்பினாராம்.

சொன்ன மாதிரியே காலாவை பாட்ஷாவோடு பெரிதாக ஒப்பிடாமல், பா.ரஞ்சித்தின் முந்தைய படமான கபாலியுடன் ஒப்பிட்டு சந்தோஷப்பட்டார்கள் ரசிகர்கள். “அந்தப்படம் கூட சுமார்தான். இது சூப்பரோ சூப்பர்” என்றார்கள்.

இதையே ரஞ்சித் சொன்னதுதான் வேடிக்கை. “கபாலியில் கூட சில குறைகள் இருந்திச்சு. இதில் அது இல்ல” என்றார் அவரே. 

கபாலி ரிலீஸ் நேரத்தில் அதை சுமார் என்று வர்ணித்த மீடியாவையே, “சாதி துவேஷம் பார்க்கிறார்கள்” என்று குற்றம் சுமத்திய ரஞ்சித் கோஷ்டி, இந்த முறை அதே கருத்துக்கு சம்மதித்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்