திரைச்செய்திகள்
Typography

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை திருட்டு விசிடிக் காரர்களான தமிழ்ராக்கர்சஸ் கண்காணித்து வருவதுதான் கண்றாவி.

“விஷால் அப்படி பேசினார். அதனால் அவர் படம் முதல் நாளே ஆன் லைனில் ரிலீஸ். விஜய் சேதுபதி நல்ல மனுஷன். அதனால் அவர் படத்தை ரெண்டு மூணு நாள் கழிச்சு போடுவோம்” என்றெல்லாம் கருத்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ரஜினியின் சமூக விரோதி பேச்சு இவர்களை என்ன பண்ணியதோ தெரியவில்லை. ‘காலா’ படத்தை அதிகாலை ஷோவிலேயே படம் பிடித்து ஆன்லைனில் ஏற்றிவிட்டார்கள். தமிழ்ராக்கர்ஸ் இணையதளமே லைக்கா நிறுவனத்தின் இன்னொரு பிராஞ்ச் தான் என்று பேசிவந்த பலரும் இதனால் ஷாக்.

BLOG COMMENTS POWERED BY DISQUS