ரஜினி ரசிகர்களே கூட ‘மவுத் லாக்’ போட்டுவிட்டு மல்லாக்கொட்டை உரிக்க கிளம்பிவிட்டார்கள்.
ஆனால் வெறிபிடித்த சிலர் மட்டும், “இந்தப்படம் 100 கோடி வசூல், 200 கோடி வசூல்” என்று கிளப்பிவிடுகிறார்கள்.
நிஜத்தில் காலா நிலவரம் தமிழக தியேட்டர்களை பொறுத்தவரை கலவரமன்றி வேறில்லை.
ரிலீசுக்கு முன் தமிழக தியேட்டர் ஏரியாவிலிருந்து 62 கோடியை பெற்றுக் கொண்ட தனுஷ், அதில் 20 கோடியை திருப்பித் தருகிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாராம்.
சலசலப்பை நிறுத்தணும்னா வேறொரு கிலுகிலுப்பையை ஆட்டினால்தான் உண்டு.
அவசரம் அவசரமாக ‘வடசென்னை’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப் போகிறார். அந்த விழாவுக்கு ரஜினி வரவே போவதில்லை என்பதுதான் இப்போதைய அதிர்ச்சி.