திரைச்செய்திகள்
Typography

சிலருக்கு கல்யாண ராசி படு சுமாராக இருக்கும். சிலருக்கு ஆஹா ஓஹோ.

சமந்தா எந்த கேட்டகிரி? எந்த நேரத்தில் தாலி கழுத்தில் ஏறியதோ, அந்த நிமிஷத்திலிருந்தே அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். தெலுங்கில்தான் அப்படியென்றால், தமிழிலும் தாறுமாறு. பெரும்பாலும் ஓடவே ஓடாத விஷால் படத்தையும் ஓட வைத்துவிட்டது சமந்தாவின் ராசி.

சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் என்று இரு படங்கள் தமிழில் வெயிட்டிங். இப்பவே காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறார்களாம் இவ்விரு பட இயக்குனர்களும். இந்த நேரத்தில் இன்னொரு குட் நியூஸ். சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தானே தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசப் போகிறார் சமு. இந்த ராசி எப்படியிருக்கும்னு தெரியலையே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்