திரைச்செய்திகள்
Typography

விஜய்யின் அப்பா என்பதற்காக இல்லை.

பொதுவாகவே எஸ்.ஏ.சி யின் கோபத்திற்கு முன் ‘சிட்டாய்’ பறந்துவிடுவார்கள் சினிமாக்காரர்கள்.

ஆனால் அவரை வைத்து டிராபிக் ராமசாமி படத்தை இயக்கி வரும் விக்கி மட்டும், அவர் முன்னாலேயே அவரை இஷ்டத்துக்கும் விமர்சிப்பார்.

என்ன காரணத்தாலோ இதை ரசிக்க ஆரம்பித்துவிட்டார் எஸ்.ஏ.சி. “ஷுட்டிங்ல எல்லாருக்கும் முன்னாடி என்னையே திட்டுவான்” என்றெல்லாம் பேசுகிற அளவுக்கு விக்கியிடம் மட்டும் கேஷுவல் மூடுக்கு வந்துவிடுவார்.

அப்படியிருக்க... லேட்டஸ்ட் தமாஷ் ஒன்று. “உங்க பேரை விளம்பரத்தில் போட்டா படம் ஓட மாட்டேங்குது.

அதனால் பேரை கட் பண்றேன்” என்றாராம் விக்கி. எஸ்.ஏ.சி பெயர் இல்லாமல்தான் ‘டிராபிக் ராமசாமி’ விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அவரு டிராபிக் ராமசாமின்னா, இவரு டெரிபிக் ராமசாமியா இருக்காரே?

BLOG COMMENTS POWERED BY DISQUS