திரைச்செய்திகள்
Typography

விஜய் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டு சின்னா பின்னமாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

நடிகையர் திலகத்தில் பெற்ற நல்ல பெயரை, ஒரு புகைப்படம் வந்து கெடுத்துவிட்டதே என்கிற கவலையும் அவருக்கு வந்திருக்கிறது.

ஏன்? ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்தி சுரேஷ் இணையும் பட ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை யாரோ ஒரு மர்ம நபர் இன்டர்நெட்டில் கசிய விட்டுவிட்டார்.

அதில், விஜய் தரையில் அமர்ந்திருக்க... சோபாவில் அமர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் விஜய்யின் காலை மிதித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

இதுதான் பிரச்சனை. கீர்த்தியின் ஏழு தலைமுறையும் அசிங்கப்படுகிற அளவுக்கு அர்ச்சிக்கிறார்கள் ரசிகர்கள்.

விஜய்யே வாய் திறந்து “நிறுத்துங்கப்பா” என்று சொல்கிற வரைக்கும் தொடரும் போலிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்