திரைச்செய்திகள்
Typography

எப்போதும் சலசலப்பும் சஞ்சலமுமாகவே இருக்கிறது சத்யம் சினிமாஸ் அரங்கத்திற்குள் நடக்கும் அத்தனை விழாக்களும்.

“தேவையா இந்த அசிங்கமெல்லாம்?”  என்று ரசிகர்கள் முணுமுணுப்பது தனிக்கதை.

காலையில் இங்கு நடத்தப்படும் சினிமா நிகழ்ச்சிகள், நண்பகல் 12 மணிக்குள் முடிந்துவிட வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. 12 மணியை தாண்டும்போது திரையரங்க ஊழியர்கள் வந்து மைக்கை அணைப்பதும், லைட்டை நிறுத்துவதும் வாடிக்கை.

அந்த மேடையிலேயே இதற்கு கண்டனம் தெரிவித்த இயக்குனர்களும் உண்டு.

சமீபத்தில் இங்கு நடந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ பட நிகழ்ச்சியிலும் இதே கொடுமை.

சூர்யா, கார்த்தி இருவரும் மேடையில் இருக்க... சட்டென்று விளக்கை நிறுத்திவிட்டது நிர்வாகம்.

அப்புறம்? பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துவிட்டு கிளம்பியது டீம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS