திரைச்செய்திகள்
Typography

பிக் பாஸ் 2 ல் கலந்து கொண்டிருக்கும் பிரபலங்களில் (?) மஹத்துக்கு ஒரு மரியாதை கிடைக்கும் போலிருக்கிறது.

எல்லாருடைய அன்பையும் வாரிக் கொள்ளும் அவர், ஒரு கட்டாயத்தின் பேரில்தான் இப்படி அடக்க ஒடுக்கமாக இருக்கிறார் என்றும் முணுமுணுக்கிறார்கள் சினிமா ஏரியாவில்.

இவரை நம்பி வந்த காதலிக்கும் அவரது குடும்பத்திற்கும் பெரிய வருத்தம்.

‘வேலைக்கும் போவதில்லை. சினிமாவிலும் பெரிய வாய்ப்பில்லை.

இப்படியே இருந்தால் என்னாவது?’ என்பதுதான் அது.

பிக் பாஸ் முதல் பார்ட் சமயத்திலேயே உள்ளே போக துடித்தவர், எப்படியோ இரண்டாம் பாகத்தில் நுழைந்துவிட்டார்.

இந்தப் புகழை வைத்துக் கொண்டு சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தால்தான் பேமிலிக்கு புத்துணர்ச்சி வரும்.

அப்படின்னா கடைசி வரைக்கும் தாக்குப் பிடிச்சுருவாரோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்