திரைச்செய்திகள்
Typography

‘சர்கார்’ முதல் போஸ்டரே ஏரியாவை கொதிக்க வைத்துவிட்டது. ஏன்? விஜய் சிகரெட்டோடு ஸ்டைலாக போஸ் தருகிறாரே... அதான்!

ரஜினி, அஜீத், விஜய் மாதிரியான கொள்ளை ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்கள் சினிமாவில் சிகரெட், தண்ணியடிப்பது போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்று அட்வைஸ் பண்ணி வருகிறார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

அப்படியிருக்க... இப்படியொரு போஸ்டர். விடுவாரா? டிசைன் வெளியான அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் வந்தது எதிர்ப்பு.

இதையெல்லாம் எதிர்பார்க்காமலா அப்படி செய்திருப்பார்கள் முருகதாசும், விஜய்யும்? எப்படியோ... நள்ளிரவு 12 மணிக்கு இன்னொரு போஸ்டர் வெளியானது.

இதில் விஜய் கையில் சிகரெட் இல்லை. சாந்தப்படுத்தும் முயற்சியாக இருக்கலாமோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS