திரைச்செய்திகள்
Typography

அக்ரிமென்ட்’ என்கிற ஆயுதம் அருவாளை விட பயங்கரமானது.

ஒரு நடிகரோ, அல்லது இயக்குனரோ பிரைட்டாக வருவார் என்று தெரிந்தால் போதும். அவரை கப்பென அமுக்கி காரியத்தை சாதித்துக் கொள்கிற லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார் ஞானவேல்ராஜா.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் சமயத்தில் பண உதவி செய்ய முன் வந்தவர், “சிவகார்த்திகேயன் கால்ஷீட் தர்றதா இருந்தா பணம்” என்று ‘லாக்’ போட, எப்படியோ சிக்கினார் சிவா.

இப்போது பதினேழு கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் சிவா, பழைய சம்பளத்திற்கு நடித்துக் கொண்டிருக்கிறார் அதே ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘சீமராஜா’ படத்தில்.

கட்... மெட்ராஸ் படத்தை தயாரிக்கிற போது டைரக்டர் பா.ரஞ்சித்திடமும் அப்படியொரு அக்ரிமென்ட் போட்டிருந்தாராம். பத்து கோடி சம்பளம் வாங்கும் ரஞ்சித், இப்போது எவ்வளவு தொகைக்குள் அடக்கப்பட்டிருக்கிறாரோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS