திரைச்செய்திகள்
Typography

விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்புக்கான அடுத்த ஷெட்யூல் துவங்கவே இல்லை.

மாதக்கணக்கில் காத்திருந்த லிங்குசாமி, அது குறித்து பலமுறை விஷாலிடம் கேட்டும் இதோ அதோ என்று இழுத்தடித்துக் கொண்டேயிருந்தார் அவர்.

கட்... திடீரென என்ன அசரீரி ஒலித்ததோ, ‘எல்லாரும் கிளம்புங்க’ என்று தென் மாவட்டம் பக்கம் பெயர்ந்துவிட்டார்கள்.

விறுவிறுவென ஷுட்டிங் நடந்து வருகிறது.

நடுவில் சிறு பட தயாரிப்பாளர்களுக்காக வழங்கப்பட்ட மானியத் தொகைக்கான அரசு செக், வங்கியில் பணமில்லாமல் ரிட்டர்ன் ஆகிவிட பலரும் விஷாலை தேடினார்கள். ‘நீங்களாச்சு... அரசாச்சு... என்னைய விட்ருங்க’ என்று கூறிவிட்டாராம் அவர்.

சரண்டர் கோழி?

BLOG COMMENTS POWERED BY DISQUS