அநேகமாக தமிழர்கள் மறந்து போன கவர்ச்சி நடிகை மும்தாஜை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப் போகிறது ‘பிக்பாஸ் 2’.
இந்த முறை கோபமும், கொந்தளிப்பும் கொஞ்சம் ஜாஸ்தியாகதான் இருக்கும் போலிருக்கிறது. ஏன்? ‘ஆட்டிட்யூட்’ என்பதற்கான முழு அர்த்தமே மும்தாஜ்தான் என்கிறார்கள் அவரை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள்.
அதுமட்டுமல்ல... சின்ன சின்ன கோபங்களுக்கெல்லாம் கூட தட்டு டம்ளர்கள் பறக்குமாம் வீட்டில்.
அப்படிப்பட்டவரை கொண்டு வந்து 100 நாள் அடைத்தால் என்னாகும்? இவர் போக உள்ளே வரப்போகும் இன்னொரு ஜோடி சண்டைக்கோழிகள் காமெடி பாலாஜியும் இவரால் தாக்கப்பட்ட முன்னாள் மனைவியும். என்னாகப்போவுதோ ஏரியா?